ஆடி நிறுவன முன்னாள் தலைவருக்கு தண்டனையா?
ஆடி நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் ரூபெர்ட் ஸ்டாட்லர். இவருக்கு மியுனிச் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு நடந்த டீசல் முறைகேட்டில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போக்ஸ்வாகன் நிறுவனத்தின் முன்னாள் குழு உறுப்பினர்களில் தண்டனை பெறும் முதல் நபராக ஆடி முன்னாள் தலைவர் மாறியுள்ளார். இவருக்கு ஒரு வருடமும் 9 மாதம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 1.1 மில்லியன் யூரோ அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை குறையவும் வாய்ப்பிருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் வழக்கில் இந்த தீர்ப்பு முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு விதிகளை ஏமாற்றுவதற்காக போலியான மென்பொருள்களை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. ஆடி,போக்ஸ்வாகன், ஆகிய நிறுவனங்கள் இந்த வகை முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. முதலில் இந்த குற்றச்சாட்டுகளை ஆடி நிறுவனம் மறுத்து வந்தது. ரூபெர்ட்டும் இந்த புகார்கள் அனைத்தும் போலி என்று மறுத்து வந்தார். வழக்கு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல்கட்ட தீர்ப்பு வெளியாகியுள்ளது.