வாண்டடாக சென்று வம்பில் சிக்கிய கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்…..
உடல் பருமனால் கேலி,கிண்டலுக்கு ஆளாகும் நபர்களுக்கு மட்டுமே தெரியும் அது எத்தனை மனவலியை தரும் என்று. இந்த வேதனையை பிரேசிலைச் சேர்ந்த பெண்ணும் அனுபவதித்துள்ளார். 38 வயதான ஜூலியானா உடல் எடை அதிகரிப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் எகனாமி கிளாஸ் வகையில் உள்ள விமான டிக்கெட்டுகளில் லெபனானில் இருந்து தோஹா வரை பயணிக்க முயற்சித்துள்ளார்.ஆனால் அவருக்கு எகனாமிக் கிளாஸ் டிக்கெட்டை அளிக்காமல், கூடுதலாக பணம் செலுத்தி பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட் வாங்க வேண்டும் என விமான நிறுவன ஊழியர்கள் நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஜூலியானா தனது இன்ஸ்டாகிராமில் நடந்ததை பதிவிட்டார். இது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தையும் அவர் நாடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த பெண்ணுக்கு கத்தார் ஏர்லைன்ஸ் விமானநிறுவனம் இழப்பீடு அளிக்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைக்கான கட்டணங்களை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. உண்மையில் கொரோனா விதிகளை சம்பந்தப்பட்ட பெண் மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா தடுப்பூசி சான்றிதழை கேட்டு அதனை அந்த பெண் தரவில்லை என்று விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.