போலி மருந்தை ஈசியா கண்டுபிடிக்க கியூஆர் கோடு..
ஒரு மருந்து போலியா இல்லையா என்பதை கண்டுபிடிக்க மத்திய அரசு அண்மையில் பார்கோடு அல்லது கியூஆர் கோடு நடைமுறையை கட்டாயப்படுத்தியது. இந்த வசதி ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. மருந்தின் பெயர், அளவு எப்போது காலாவதி ஆகும் என்ற தகவல்களை இந்த கோடுகளை ஸ்கேன் செய்தாலே தெரிந்துகொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த நவம்பர் 17ஆம் தேதி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. 300 பிராண்டுகளைச் சேர்ந்த மருந்துகள் இந்த புதிய கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இது தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான DGCI மருந்து நிறுவனங்களுக்கு கண்டிப்பான சுற்றறிக்கைகளை அறிவித்தது. Allegra, Shelcal, Calpol, Dolo , Meftal உள்ளிட்ட நிறுவனங்கள் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அமைப்பு தெரிவித்துள்ளது. பார்கோடு வசதியை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்படி ஸ்கேன் செய்யும்போது கீழ்கண்ட தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
1.தனித்துவமான பொருளின் அடையாள கோட்
2.மருந்தின் பொதுப்பெயர்
3.பிராண்டின் பெயர் வேண்டும்
4.உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி
5.பேட்ச் எண்
6.மருந்தின் காலாவதி தேதி
7.உரிம எண்
8.உற்பத்தி தேதி
உள்ளிட்டவை இடம்பிடித்திருக்க வேண்டும். போலி மருந்துகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.