75 லட்சம் பங்குகளை விற்ற பிக் புல்
இந்தியாவில் பிக் புல் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, அண்மையில் ஒரு நிறுவனத்தின் பங்கை பெரிய அளவில் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அது சார்ந்த ஒரு நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ளது வந்தார்.
டெல்டா கார்ப் என்னும் நிறுவனத்தில் பங்கு, சுமார் 340 ரூபாய் வரை அதிகரித்து இருந்த நிலையில், பங்குச்சந்தையின் தற்போதைய சரிவு போக்கு காரணமாக, 175 ரூபாய் என்ற நிலையில் இருக்கிறது. இந்த பங்கின் 52 வார குறைந்த விலை என்பது 165 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், இதை நோக்கி இந்த பங்கின் பயணம் இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டு துறை இந்தியாவில் தற்போதைய நிலையை காட்டிலும் மேலும் பிரபலம் அடையும் போது, இது போன்ற நிறுவனங்களின் மதிப்பு கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், தற்போதைய சந்தை போக்கில், இந்த பங்கின் விலை மேலும் சரிவடையும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 75 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக பங்குச்சந்தை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.