48 மணிநேரத்தில் டீலை முடித்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா..
ஆகாசா ஏர் விமான நிறுவனத்தை ராகேஷ் ஜூன்ஜூன்வாலா வெறும் 48 மணி நேரத்தில் டீலை முடித்ததாக அவரின் நண்பரான பாஸ்கர் பட் தெரிவித்துள்ளார். பாஸ்கர் பட் டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவராவார். ரமேஷ் தமானி என்பவருக்கு பாஸ்கர் பட் ஒரு இன்டர்வியூவில் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய பாஸ்கர், ராகேஷ் எப்போதும் விமானங்கள் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்ததாக தனது மறைந்த நண்பரின் நினைவுகளை அசைபோட்டார். இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் ராகேஷ் அதிக முதலீடு செய்ததாக கூறியுள்ள பாஸ்கர் பட்,, ராகேஷின் முதலீட்டு திட்டங்கள் ஏதும் பலன் தரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆகாசா ஏர் விமான நிறுவனம் விலைக்கு வருவது தெரிந்ததும் சரியான நேரத்தில் வேகமாக செயல்பட்ட ராகேஷ் ஆகாசா ஏர் விமான நிறுவனத்தை வாங்கிவிட்டார் என்றார் வெறும் 48 மணி நேரத்தில் இந்த டீல் முடிந்தது என்றார் 2021ஆம் ஆண்டு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை ராகேஷ் முதலீடு செய்திருந்தார். 2022 ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆகாசா விமான நிறுவனம் தனது முதல் விமான சேவையை மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு இயக்கியது. விமான சேவையை அறிமுகப்படுத்திய போதே ராகேஷ் அகால மரணமடைந்தார். இது குறித்து பேசிய பாஸ்கர் பட், ராகேஷ் எப்போதும் முதலீடு செய்வதை முதலில் செய்வார் என்றும் அது பற்றிய விசாரணையை பின்னர் நடத்திக்கொள்ளலாம் என்று கூறுவார் என்றார். எப்போதும் ஹோம் ஒர்க் செய்து கொண்டே இருப்பார் ராகேஷ் என்றும் பாஸ்கர் தெரிவித்தார். உலகளவில் வரும் 2030ஆம் ஆண்டு இந்தியா 3 ஆவது பெரிய விமான சேவை அளிக்கும் நாடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆகாசா ஏர் விமான நிறுவனத்தில் கூடுதலாக் 300 விமானங்கள் வாங்கப்பட இருப்பதாகவும்,இந்தாண்டு இறுதிக்குள் சர்வதேச விமானங்களை இயக்க இருப்பதாகவும் ஆகாசா ஏர் நிறுவன தலைமை செயல் அதிகாரி வினய் துபே தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு மட்டும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா , இண்டிகோ நிறுவனத்தின் மீது 400 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.