ராகேஷ் ஜுன் ஜுன்வாலா பிடியில் TaTa.. தொடரும் முதலீட்டாளர்கள்….!!
டாடா குழுமத்தை சேர்ந்த Tata Communications-ன் பங்குகள் இன்று(08.04.2022) காலையிலே நல்ல ஏற்றத்தில் தொடங்கியது.
நல்ல தொடக்கம்:
Tata Communications-ன் பங்குகள் இன்று(08.04.2022) காலையிலே நல்ல ஏற்றத்தில் தொடங்கியது. இந்த பங்குகள் கடந்த சந்தை முடிவின்போது, ரூ.1326.25 என்ற அளவில் இருந்தது. இது 5.64 சதவீத ஏற்றத்தில் ரூ.1401 என்று காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் தற்போது Tata Communications-ன் பங்கு 3.14 சதவீதம் உயர்ந்து ரூ.1369.70-ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த பங்கின் இன்றைய அதிகபட்ச விலை 1400.80 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலையானது. 1332.08 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Tata Communications-ன் பங்கு 52 வாரத்துக்கான அதிகபட்ச விலை 1591.95 ரூபாயாகவும், 52 வார குறைந்தபட்ச விலை 1037.05 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையை பொறுத்தவரை டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை தற்போது 3.26 சதவீதம் அதிகரித்து 1369.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையில், டாடா கம்யூனிகேஷன்சின் இன்றைய அதிகபட்ச விலை 1401 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலை 1332.90 ரூபாயாகவும் இருக்கிறது. இந்த பங்கின் 52 வாரத்துக்கான அதிகபட்ச விலை 1590 ரூபாயாக, 52 வார குறைந்தபட்ச விலை 1036.30 ரூபாயாக உள்ளது.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா பிடியில் டாடா:
Tata Communications-ன் பங்கை இந்தியாவின் Warren Buffet என்று அழைக்கப்படும் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவும், அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலாவும் Tata Communications-ன் பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். இதனால் Tata Communications பங்கின் சந்தை மதிப்பு கூடியிருப்பதால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பலரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் போர்ட்ஃபோலியோவை பின்தொடருகின்றனர்.