மெகா ஹிட் அடிக்குமா ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் “ஸ்டார் இன்சூரன்ஸ்” ஐபிஓ !
ராகேஷ் ஜூன்ஜுன்வாலா மற்றும் வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் உள்ளிட்ட முதலீட்டாளர்களின் கூட்டமைப்புக்குச் சொந்தமான ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்ஸ் கோ லிமிடெட் முதலீடு திரட்டுவதற்காக அதன் பங்குகளை பட்டியலிடுகிறது. ஆரம்ப விலையாக 870 – 900 இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதியிலிருந்து டிசம்பர் 2 வரை பங்கு விற்பனை நடைபெறும். டிசம்பர் 10 ம் தேதி சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மூலதன வழிவகைகளைப் பெருக்குவதற்காகப் பயன்படுத்தப்படும்.
தற்போது சேஃப்கிராப் இன்வெஸ்ட்மெண்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 47.77 சதவீதப் பங்குகள் உள்ளன. அதைப்போல ராகேஷ் ஜூன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலாவும் முறையே 14.98 சதவீதம், 3.23 சதவீதப் பங்குகளை வைத்துள்ளனர். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நான்காவது தனியார் துறை காப்பீட்டு நிறுவனம் ஸ்டார் ஹெல்த் ஆகும்.
கோட்டக் இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங், ஆக்சிஸ் கேப்பிட்டல், போஃபா செக்யூரிட்டீஸ் இந்தியா, சிட்டி குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா, ஐ சி ஐ சி ஐ செக்யூரிட்டிஸ், சி எல் எஸ் ஏ இந்தியா பிரைவேட் லிமிடெட், கிரெடிட் சூஸ் செக்யூரிட்டிஸ் இந்தியா, ஜெஃப்ரிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், டாம் கேப்பிட்டல் அட்வைசர், ஐஐஎஃப்எல் செக்யூரிட்டிஸ், மற்றும் எஸ்பிஐ கேபிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கு விற்பனையை நிர்வகிக்கின்றன.