1.5 மடங்கு கூடுதல் தங்கம் வாங்கிய ரிசர்வ் வங்கி..

இந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி மேலும் 24 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. உலகளவில் நிலவி வரும் நிலையற்ற பொருளாதார நிலையில் , சவலான நேரத்தில் இந்தியாவின் தங்க கையிருப்பை மேம்படுத்தவே இத்தகைய முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியுள்ளது. 2023ஆம் ஆண்டில் மொத்தமாகவே 16 டன் தங்கம்தான் வாங்கப்பட்டன. ஆனால் இந்தாண்டு அதிகம் வாங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ரிசர்வ் வங்கியிடம் 827.69 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது. இது கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நிலையாகும். கடந்த டிசம்பர் இறுதியில் இந்தியாவிடம் 803.6 டன் தங்கம் மட்டுமே இறுந்தது. 2017-ல் தொடங்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி வருகிறது. கடந்த 2022-ல் இருந்து மிகவும் ஆக்டிவாக தங்கம் வாங்குவதில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்தி வருகிறது. கடந்த டிசம்பரில் வெளிநாட்டு கரன்சி ரிசர்வில் தங்கத்தின் அளவு 7.75 விழுக்காடு ஆக இருந்தது. தற்போது இந்த அளவு 8.7விழுக்காடாக அதிகரித்துள்ளது(ஏப்ரல் வரை). தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் , தங்கத்தின் தேவையும் உயர்ந்து வருகிறது. உலகளவில் பல பிரச்சனைகள் வந்த போதும் தங்கத்தின் மதிப்பு மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதுதான் சரியான முதலீடாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.