பொருளாதார பின்னடைவு – இந்திய ரிசர்வ் வங்கி
வழக்கத்திற்கு மாறாக இந்திய ரிசர்வ் வங்கி அதன் ஜூலை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.
எப்பொழுதும் வார நாட்களில் புல்லட்டின் வெளியிடப்படும். இம்முறை வெளியான மாதாந்திர புல்லட்டின்,”இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு பின்னடைவு மற்றும் வேகத்தைக் காட்டுகிறது” என்பதை விவரிக்கிறது. இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ளது என்றும் அது கூறுகிறது.
உணவு விலைக் குறியீடு, மார்ச் மாதத்தில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் டாலர் குறியீடு 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ரூபாய் 6.9 சதவிகிதம் மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது. மற்ற நாணயங்களைக் காட்டிலும் ரூபாயின் இந்த வீழ்ச்சி குறைவுதான் என்று ரிசர்வ் வங்கியின் புல்லட்டின் கூறுகிறது.
ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக $26 பில்லியனாக மாதாந்திர வர்த்தகப் பற்றாக்குறை இருப்பது கவலையளிக்கிறது என்று அறிக்கை ஒப்புக்கொள்கிறது. ஆனால் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் மூன்றாவது தொடர்ச்சியான மாதாந்திர உயர்வைப் பதிவு செய்வதால் ஏற்கனவே வலுவாக இருக்கும் ஏற்றுமதிகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.