சமாதானம் பேச அழைக்கிறது ரிசர்வ் வங்கி…!!!
வங்கிகளில் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தாமல் உள்ளோரை ரிசர்வ் வங்கி wilful defaulter என்று அழைக்கிறது. இப்படி பணம் இருந்தும் திரும்ப செலுத்த வாய்ப்பிருந்தும் கடன்களை திரும்ப செலுத்தாமல் திரிவோருக்கு ஒரு வாய்ப்பளிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தொகை செலுத்தி தங்கள் கடன்களை முடித்துக்கொள்வதே அந்த சமாதான முயற்சியாகும். சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டால் அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு பிறகு புதிதாக கடன் தரலாம் என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. கடனை வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் உள்ளோருக்கு சில சலுகைகள் அளிப்பதன் மூலம் வங்கிகளுக்கு ஆகும் நீதித்துறை சார்ந்த செலவுகள் குறையும் என்றும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தனிநபர்கள் மட்டுமின்றி நிறுவனங்களுக்கும் இந்த சலுகையை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி, முழுமையாக பணத்தை வசூலிக்க தேவையான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே வங்கிகளிடம் இருந்து வாங்கும் கடன்களை சமாதான கூட்டம் நடத்தி திரும்பப்பெறும் வங்கிகள் எர்ணாகுளத்தில் உள்ள கடன்கள் திரும்பப்பெறும் தீர்ப்பாயத்தில் தகவல் தெரிவிப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.