ரூபாயின் சரிவைத் தடுக்க நடவடிக்கை – RBI
இந்திய ரிசர்வ் வங்கி, டாலருக்கு எதிரான ரூபாயின் சரிவைத் தடுக்கவம் அன்னியச் செலாவணி வரவை அதிகரிப்பதற்காகவும் தொடர் நடவடிக்கைகளை அறிவித்தது.
ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நிறுவனங்களின் வருடாந்திர வெளிநாட்டு கடன் வரம்புகளை 1.5 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்குதல் மற்றும் வட்டி விகித வரம்புகளை தற்காலிகமாக ரத்து செய்தல் ஆகியவைகளுடன் வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து வங்கிகள் டெபாசிட்களை ஈர்ப்பதும் அடங்கும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அரசு மற்றும் கார்ப்பரேட் கடனில் முதலீடு செய்வதற்கான விதிகளை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது.
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து தங்கள் முதலீடுகளை வெளியேற்றியதாலும், கச்சா, தங்கத்தின் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், ஜூன் மாதத்தில் நாட்டின் வர்த்தக இடைவெளி படிப்படியாக விரிவடைந்ததாலும், கடந்த வாரங்களில் ரூபாயின் மதிப்பு கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஜூலை 1 முதல் நவம்பர் 4 வரை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து டாலர் மற்றும் ரூபாய் மதிப்பிலான கால வைப்புகளின் விகிதம் மேலும், ஜூலை 7 மற்றும் அக்டோபர் 31 க்கு இடையில் இந்த டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களின் உச்சவரம்பை RBI நீக்கியது.
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டு (FPI) விதிமுறைகளை தளர்த்தி, RBI 7 ஆண்டு மற்றும் 14 ஆண்டு கால அரசு பத்திரங்களை முழுமையாக அணுகக்கூடிய வகையில் புதிய வெளியீடுகளை அனுமதித்தது.