பங்காளியை விட 2.5 மடங்கு அதிகம்..
ரிசர்வ் வங்கியின் பேலன்ஸ் ஷீட் தரவுகளின்படி, மார்ச் 31, 2024 அன்று வரை 70.48 லட்சம் கோடி ரூபாய் பணம் ரிசர்வ வங்கியிடம் இருக்கிறது. ரிசர்வ் வங்கியன் ஆண்டு அறிக்கையில் இந்த தரவுகள் வெளியாகியுள்ளன. இந்த தொகை என்பது பாகிஸ்தானின் மொத்த ஜிடிபியைவிடவும் இரண்டரை மடங்கு அதிகமாகும். இந்தியாவின் பேலன்ஸ் ஷீட்டில் 844.76 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உள்ளன. அதே நேரம் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தி 338.24 பில்லியன் அமெரிக்க டாலர்கள்காக இருக்கிறது. 2023 நிதியாண்டின் தகவலின்படி இந்தியாவின் பேலன்ஸ் ஷீட் 63.44 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கொரோனாவுக்கு முன்பு இருந்த அளவை ரிசர்வ் வங்கியின் பேலன்ஸ் ஷீட் எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2023 மார்ச்சில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 23.5 விழுக்காடாக இருந்த நிலையில் இது தற்போது 24.1விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் வருவாய் 17.04 விழுக்காடு உயர்ந்தும், செலவு 56.30 விழுக்காடு குறைந்தும் உள்ளது. ரிசர்வ் வங்கியின் உபரி நிதி 141.23 விழுக்காடு உயர்ந்தும் உள்ளது. இதன் ஒரு பகுதியைத்தான் அண்மையில் டிவிடண்ட்டாக மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியது. இந்திய பொருளாதாரம்பி ரகாசமாகவும்,அடிப்படையில் வலுவாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்தியாவுக்கு உணவு பணவீக்கம்தான் மிகவும் ஆபத்தாக இருப்பதாகவும்,இதனால் மொத்த பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. 2025 நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்க விகிதம் இலக்கை ஒட்டிய அளவை நெருங்கி வந்திருக்கிறது. இது கிராமபுறங்களில் தேவையை குறைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பணம் கையிருப்பு இருப்பதால் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கையை சமாளிக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.