புதிய ஆப் தொடங்கியுள்ள ரிசர்வ் வங்கி..
பிரவா என்ற பெயரில் ரிசர்வ் வங்கி புதிய செயலியை செவ்வாய்க்கிழமை (மே 28-ல் ) அறிமுகப்படுத்தியது. நிதி நுட்ப நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல், சில்லறைமுதலீடு மற்றும் நிதிநுட்ப தரவுகளை ஆராய்தல் என 3 பணிகளை இந்த செயலி மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலி மூலம் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஒப்புதல் பெறுவது மிக மிக சுலபம் என்று கூறப்படுகிறது. 60 வகையான விண்ணப்பங்களை உள்ளடக்கியதாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பாதுகாப்பு பத்திரங்களை பொதுமக்களே நேரடியாக செல்போன் செயலி மூலம் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஃபின்டெக் ரெபாசிட்டரி என்ற பிரிவு நிதி நுட்ப நிறுவனங்களுக்கும் திட்டம் சார்ந்த வடிவமைப்புக்கும் உதவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிதி நிறுவனங்களுக்கு என பிரத்யேக பிரிவும் ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டங்களை வடிவமைப்போர், பல துறைகளை சார்ந்தோரை சந்திக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இன்னோவேஷன் ஹப் என்பதையும் ரிசர்வ் வங்கி கணக்கில் கொண்டு புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆப்கள் ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.