Manappuram Financeக்கு அபராதம்.. வாழ்க்கைய எளிதாக்குனு வழக்கு வெச்சுட்டியே..!!
கேஒய்சி மற்றும் ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகள் தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக இந்திய ரிசர்வ் வங்கி, நிதி நிறுவனமான மணப்புரம் ஃபைனான்ஸ்க்கு அபராதம் விதித்துள்ளது.
பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம், 2007ன் பிரிவு 30ன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கட்டுப்பாட்டாளர் ஒரு வெளியீட்டில் தெரிவித்தார்.
Prepaid Payment Instruments (PPIs) மற்றும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகளை வழங்குதல் மற்றும் இயக்குதல் குறித்த சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக நிறுவனத்திற்கு ரூ.17,63,965 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரவுகளை பின்பற்றாததற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.