வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது – இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தினை (ரெப்போ) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டிற்கான மூன்றாவது பணவியல் கொள்கையை வெளியிட்ட தாஸ், இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், மத்திய வங்கி தொடர்ந்து வளர்ச்சியை ஆதரிக்கும் என்றும் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கவர்னர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், நாட்டில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அதைக கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ வங்கி உயர்த்தியுள்ளது என்று கூறினார்.
ஏற்கனவே ரிசர்வ் வங்கி, மே மாதம் 4ம் தேதி வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் அதிகரித்தது. இந்நிலையில் மீண்டும் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.
வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்தையடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளுக்கு, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் கடன் வ்ழங்க ஊரக கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் கடன் வழங்கும் அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருக்க. அதன் வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருக்கும் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.