ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவுகள்: ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; ஈஎம்ஐ மாறாது!
நிதி கொள்கை முடிவுகளில் (RBI Monetary Policy) ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றும் ஏதும் செய்யவில்லை. ரெப்போ (repo) விகிதம் 4 சதவிகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ (reverse repo) விகிதம் 3.35 சதவிகிதமாக உள்ளது.
சென்ற கூட்டத்தில் இருந்ததை விட இப்போது சிறப்பாக இருக்கிறோம், மெதுவாக, ஆனால், உறுதியாக முன்னேறி வருகிறோம், தடுப்பூசி போடும் வேகம் அதிகரித்து வருகிறது. மூன்றாவது அலை நம்மை நோக்கி வருவதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
2022 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) கணிப்பு கொள்கை குழுவால் 9.5 சதவீதமாக காணப்படுகிறது.
நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் (Consumer Price Index- நுகர்பொருட்களின் மீதான விலைக்குறியீடு) 2021-22ஆம் நிதியாண்டில் 5.7 வரையில் உயரும் எனக் கூறியுள்ளார் சக்திகாந்த தாஸ். முன்பு நுகர்வோர் பணவீக்கக் குறியீடு (CPI) 5.1 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது, இப்போது 5.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.