பர்சனல் லோன்களை கண்காணிக்கிறது ரிசர்வ்வங்கி..
ஒரு வங்கி எந்தவித ஆதாரங்களோ,டெபாசிட்டோ இல்லாமல் ஒருவருக்கு கடன் தருவதற்கு பெயர் பாதுகாப்பற்ற கடனாகும். இந்த கடன்கள் கிரிடிட் கார்டு,பர்சனல் லோன் போன்றவற்றில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அதிகரித்து வரும் தனிநபர் கடன்களை கண்காணித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிஸ்க் அளவு அதிகம் என்பதால் கவனமாக இருக்கவும்,விதிகளை சற்று கடுமையாக்கவும் ரிசர்வ் வங்கி, நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.நிதி கொள்கை கூட்டத்திற்கு பிறகு பேசிய சக்திகாந்ததாஸ் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தனிநபர் கடன் அளிக்கும் விகிதம் மிக அதிக அளவில் இருப்பதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அழுத்தம் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து வருகிறது .ரிஸ்க் மேலாண்மையை சீராக வைத்துக்கொள்ளவும்,தர அளவுகளை சீராக்கவும் வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அனைத்து நிதி நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. நிதி கொள்கைக்கூட்டத்தின் முடிவில் பேசிய சக்தி காந்ததாஸ், இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருப்பதாகவும் பாராட்டினார்.