பஜாஜ் பினான்சுக்கு ஆப்படித்த ஆர்பிஐ..
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்நிலையில் இ-காம் மற்றும் இன்ஸ்டா ஈஎம்ஐ கார்டுகள் அடிப்படையில் முன்கூட்டியே வழங்கப்படும் கடன்கள், வழங்குவதை உடனடியாக நிறுத்த ரிசர்வ் வங்கி, பஜாஜ் பினான்ஸ் நிறுவனத்துக்கு ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி வகுத்துள்ள டிஜிட்டல் கடன் விதிகளை பஜாத் பினான்ஸ் பின்பற்றவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான பஜாஜ் பைனான்சின் மீது ரிசர்வ் வங்கி ஒழுங்கு நடவடிக்கை என்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவின் பெரிய சந்தை மூலதனம் வைத்துள்ள டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாக பஜாஜ் பைனான்ஸ் இருக்கிறது. கீ ஃபாக்ட் ஸ்டேட்மண்ட் என்று கூறப்படும் தெளிவான விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்பதால் இந்த நடவடிக்கைக்கு பஜாஜ் ஃபினான்ஸ் ஆளாகியுள்ளது.
இரண்டு பிரிவு பொருட்களுக்கு மட்டுமே ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதனால் அந்நிறுவனத்துக்கு எவ்வளவு நஷ்டம் என்பது குறிப்பிடப்படவில்லை.இந்த திடீர் தடையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ள பஜாஜ் நிறுவனம், எவ்வளவு விரைவாக இந்த விவகாரத்தில் விதிகளை பின்பற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக பின்பற்ற இருப்பதாக பஜாஜ் நிறுவனம் கூறியுள்ளது. அண்மையில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தொடர்பில்லாத நபர்களுக்கு வங்கிக்கணக்கு விவரங்கள் இணைக்கப்பட்டதால் பாப் வேர்ல்ட் என்ற செயலியை 3 மாதங்கள் தடை விதித்து இருந்தது. கடந்த டிசம்பர் 2020- ல் எச்டிஎப்சி வங்கியில் ஏற்பட்ட குளறுபடிக்காக 2 ஆண்டுகள் புதிய கிரிடிட் கார்டுகள் வழங்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2021 -ல் அந்த தடையை ரிசர்வ் வங்கியே ஆகஸ்ட்டில் நீக்கியது. Mastercard, Diners Club, American Express and PayTm Payments Bank ஆகிய நிறுவனங்களும் இதற்கு முன்பு ரிசர்வ் வங்கியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவன முதலீடுகளாக 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி திரட்ட QIPஅனுமதி கோரி பஜாஜ் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த திடீர் தடை வணிக வட்டாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.