விதிகளை மீறியதாக புகார்.. – Axis, IDBI வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு..!!
வங்கி நடைமுறைகளுக்கான விதிகளை மீறிய புகாரில், ஆக்சிஸ் மற்றும் ஐடிபிஐ வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.93 லட்சமும், ஐடிபிஐ வங்கிக்கு ரூ.90 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Axis வங்கியைப் பொறுத்தவரை, RBI கடன்கள் மற்றும் முன்பணம், KYC வழிகாட்டுதல்கள் மற்றும் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்கான அபராதம் ஆகியவற்றில் ஆர்பிஐ வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக அபராதம் விதித்துள்ளது. மேலும் ஆக்சிஸ் வங்கி சில விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி கூறியது.
ஐடிபிஐ வங்கியைப் பொறுத்தவரை, வங்கி தாமதத்துடன் மோசடிகளைப் புகாரளித்ததாகவும், ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மோசடிகள் தொடர்பான ஃபிளாஷ் அறிக்கைகளை ரிசர்வ் வங்கிக்கு தாமதத்துடன் சமர்ப்பித்ததாகவும், விடுமுறை நாட்களுக்கான நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரவு அணுகல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தவறியதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனிடையே ஐடிபிஐ வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, அதன் உள் கட்டுப்பாட்டு வழிமுறைகளை வலுப்படுத்த தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.