ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்..
விதிகளை மீறியுள்ள வங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடுமை காட்டிவருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் எச்டிஎப்சி, பேடிஎம், பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகிந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து அதிரடி காட்டியது. தற்போது இதே மத்திய அரசின் அமைப்பான ரிசர்வ் வங்கி, பவர் பைனான்ஸ் கார்பரேஷன், ஆர்இசி மற்றும் ஐஆர்ஈடிஏ ஆகிய நிறுவனங்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.நம் அண்டை நாடான சீனாவில் மத்திய வங்கியின் எச்சரிக்கை இல்லாததால்தான் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் மத்திய வங்கியால் கடநந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11 விழுக்காடாக இருந்த வாராக்கடன்கள் ,தற்போது சரிந்துள்ளது. இரும்பு, கனிமம், சுரங்கம், ஜவுளி மற்றும் விமானத்துறை பங்குகள் 52 விழுக்காடு வரை பாதிப்பை சந்தித்திருப்பதாக கடந்த 2014 ஆம் ஆண்டே ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்தது. நீண்ட நாட்களாக தாமதமாகும் திட்டங்களால் உள்கட்டமைப்புத்துறை பாதிக்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கி எச்சரித்து இருந்தது. இந்த முன்னெடுப்புகளால் வாராக்கடன் 10-ல் இருந்து 3 விழுக்காடாக குறைந்தது. கடுமையான விதிகளை ரிசர்வ் வங்கி உருவாக்கியும் வருகிறது. புதிய விதிகளின்படி படிப்படியாகத்தான் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என்று வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு செய்வதால் தரவுகளை கையாள்வது எளிது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. புதிய விதிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் ஜூன் 15 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளுக்கு ஏராளமான நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நிறுவனத்தின் திட்ட கடனை ரிசர்வ் வங்கியின் புதிய விதி பாதிக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சில நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் இந்திய வங்கிகளின் சங்கம் வாயிலாக முறையிடவும் திட்டமிட்டுள்ளனர்.