தங்கம் விலை உயர இவைதான் காரணங்கள்..
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் இதுவரை இல்லாத மிகமுக்கிய அளவாக 2,300 டாலர்களாக உள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தனது கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்காமல் அடம்பிடிப்பதன் எதிரொலியாகவே இந்த விலையேற்றம் காணப்படுகிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதும், அதுவும் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்க முக்கிய காரணிகளாக உள்ளது. கடந்த அக்டோபரில் இருந்து இதுவரை தங்கத்தின் விலை 25 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணியாக உலகளாவிய சமநிலையற்ற சூழல் கூறப்படுகிறது. சீனா தங்கத்தை தொடர்ந்து அதிகளவில் வாங்கிக் குவிப்பதும் தங்கம் விலை உயர காரணமாக அமைந்துள்ளது. கடந்த 16 மாதங்களாக சீனா தங்கத்தை அதிகளவில் வாங்குகிறது. அமெரிக்காவை நம்பாமல் முதலீடுகளை மாற்றும் சீனாவின் முயற்சியும், சீனா பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்ற முயற்சியும் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்திருக்கிறது. டாலருக்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்தால் அது பாதுகாப்பான முதலீடு என்று அமெரிக்கர்கள் முடிவெடுத்துள்ளதும் இதற்கு முக்கிய காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் பண்ணைகளில் இல்லாமல் மற்ற துறைகளில் வேலை செய்வோர் குறித்த தரவுகள் வெளியான பிறகே தங்கத்தின் முதலீடு மாறுபடும் என்றும் அடுத்த சில நாட்களுக்கு தங்கம் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர்.