ரீசார்ஜ் கட்டணம் உயர்வு- மத்திய அரசு விளக்கம்..
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் அண்மையில் அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. அதில் டிராய் என்ற மத்திய அரசின் கட்டுபாட்டு அமைப்பு, விலைகளை நிர்ணயிப்பது இல்லை என்றும் அதேநேரம் விதிகளுக்கு உட்பட்டு தனியார் நிறுவனங்கள்தான் விலைகளை உயர்த்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள நிலவரத்தில் அரசு தலையிடாது என்றும் அதனை நிர்வகிக்கத்தான் டிராய் என்ற அமைப்பு உள்ளதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 5ஜி சேவைகளுக்காக டெலிகாம் நிறுவனங்கள் பெரிய தொகைகளை முதலீடு செய்திருக்கின்றன. அதன் காரணமாக விலை உயர்வு தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதாகவும், அதிக உபகரணங்கள் பயன்பாடு காரணமாக இந்தியாவின் சர்வதேச மதிப்பு 111 ஆவது இடத்தில் இருந்து தற்போது 15 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக டிராய் விளக்கியுள்ளது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறையில் பெரிய வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்ததால் வளர்ச்சி மங்கியிருந்ததாகவும், கடந்த 10 ஆண்டுகளில் செல்போன் சிம்கார்டு சேவை வழங்கும் நிறுவனங்களின் கட்டணம் வெகுவாக குறைந்திருப்பதாகவும் டிராய் விளக்கம் அளித்துள்ளது.