சிறுதானிய உற்பத்தி பொருட்களுக்கு வரிகள் குறைப்பு…
சரக்கு மற்றும் சேவை வரிகளின் 52ஆவது கூட்டம் டெல்லயில் நடந்தது. இதில் சிறுதானிய பொருட்கள்மீதான வரியை 70%வரை குறைக்க வகைசெய்யப்பட்டுள்ளது.அதாவது 18விழுக்காடாக இருந்த சிறுதானிய பொடிகளின் மீதான ஜிஎஸ்டி தற்போது 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிறுதானிய பொடிகளை சில்லறையாக விற்றால் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்திருக்கிறது. இதேபோல் வெள்ளப்பாகுக்கு விதிக்கப்பட்ட 28%ஜிஎஸ்டி தற்போது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது .நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் டிஸ்டில்ட் ஆல்கஹால் எனப்படும் சாராயாத்துக்கு மறைமுக வரி நீக்கப்பட்டது. இந்திய ரயில்வேவால் வழங்கப்படும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு புதிய திட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. குடிநீர்,பொது சுகாதாரம்,திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவற்றிற்கு ஜிஎஸ்டி வரிகிடையாது.யார்ன் எனப்படும் நூலக்கான ஜிஎஸ்டி வரியும் 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. பார்லி மால்ட்டின் வரிகளும் 18-ல் இருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.