2 வாரத்தில் ஆயிரம் கோடி சம்பாதித்த ரேகா ஜுன்ஜுன்வாலா!!!!
டாடா குழுமத்தில் டைட்டன் என்ற நிறுவனம் உள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த பிப்ரவரி2ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2 ஆயிரத்து 310 ரூபாயாக இருந்த ஒரு பங்கு , சில நாட்களுக்குள்ளேயே 2ஆயிரத்து535 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் எப்படி ரேகாவுக்கு லாபம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ரேகா ஜுன்ஜுன்வாலா என்பவர் 4 கோடியே 58 லட்சத்து 95 ஆயிரத்து 970 டாடா பங்குகளை வைத்திருந்தார். தற்போது விலை ஏற்றம் கண்டுள்ளதால் ரேகா வைத்திருந்த பங்குகளின் மதிப்பு ஆயிரத்து 32 கோடியே 65 லட்சத்து 93 ஆயிரத்து 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. மறைந்த தொழிலதிபரான ராகேஷ் ஜுன்ஜூன்வாலா வைத்திருந்த 3 கோடியே 41 லட்சம் பங்குகளும் தற்போது அவரின் மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலாவிடம் உள்ளன. டைட்டன் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் ரேகாவிடம் மட்டும் தற்போது 5% உள்ளன. அக்டோபர் முதல் டிசம்பர் வரை ரேகா கையில் வைத்திருந்த பங்குகளில் 33 லட்சத்து 5 ஆயிரம் பங்குகளை அவர் விற்றுவிட்டார். இல்லையெனில் மொத்த மதிப்பு இன்னும் அவருக்கு அதிகரித்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.