ரஷ்ய நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டீல்..
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் என்ற நிறுவனத்துடன் டீல் ஒன்றை போட்டுள்ளது. இந்த டீல் ஓராண்டுக்கு மட்டுமே செல்லும். இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு மாதத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் சராசரியாக 30 லட்சம் பேரல் கச்சாஎண்ணெய் வாங்கிக்கொள்ளும். இந்த ஒப்பந்த்தின் மூலம் ரஷ்யாவும் பலன்பெறும், அதே நேரம் குறைந்த விலையில் ரிலையன்சுக்கு எரிபொருட்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரலில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி 10லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஒரு பேரல் 3 அமெரிக்க டாலர் அளவுக்கு குறைந்த விலையில் ரிலையன்ஸ் வாங்க முடியும். இந்த தொகை மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் துபாய் நிர்ணயித்த தொகையை விட குறைவானதாகும்.இதேபோல் ரிலையன்ஸ் நிறுவனம் கோஸ்மினோ என்ற நிறுவனத்திடமும் சல்பர் கச்சா எண்ணெயை வாங்கி பயன்படுத்துகிறது. இதுவும் துபாய் விலையை விட பேரலுக்கு 1 டாலர் குறைவாகும். ரஷ்ய கச்சா எண்ணெயை ரூபெல் பணத்தில் வாங்கவும் ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கென எச்டிஎப்சி வங்க பிரத்யேக வசதியை செய்திருக்கிறது. ஜூன் 2 ஆம் தேதி ஓபெக் நாடுகள் ஆன்லைனில் கூடிரஷ்யாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி பற்றி இறுதி முடிவு எடுக்க உள்ளன. 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்த்து விட்டன..