அதிரடியில் முன்னணி நிறுவனங்கள்..
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மின்சார உபகரணங்கள் துறையில் விற்பனையில் காலடி எடுத்து வைக்கிறது. அவர்களே தங்கள் சொந்த பிராண்டாக வைசர் என்ற நிறுவனத்தை தொடங்கி , பொருட்களை விற்கத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக வைசர் ஏசி சந்தைக்கு வந்துள்ளது. இதேபோல் டிவி, வாஷிங் மிஷின் உள்ளிட்டவையும் விரைவில் களமிறங்க இருக்கின்றன. இதே நிறுவனம் எல்இடி பல்புகளையும் தயாரிக்க இருக்கிறது. ரிலையன்ஸ் ஒரு பக்கம், இமாமி நிறுவனம் ,கோல்கேட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை ஒரு நிதியாண்டில் சம்பாதித்து உள்ளனர். இவர்களைத் தவிர்த்து டாடா குழுமத்தினரும் டாடா நியூ என்ற செயலியை களமிறக்கி பொருட்களை விற்று வருகின்றனர். 2026 ஆம் ஆண்டு இந்தியாதான் உலகிலேயே 3 ஆவது பெரிய வாடிக்கையாளர் நாடாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். அமெரிக்கா மற்றும் சீனாவில் இந்த கிராக்கி அதிகரித்துள்ளது. ஜப்பான், ஜெர்மனியை மிஞ்சும் வகையில் இந்தியா முன்னேறி செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 15 வவயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 4 விழுக்காடாக இந்தியாவில் உள்ளது. இவர்களின் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து அளவுக்கு பொருட்களை இந்தியர்கள் விரைவில் வாங்குவார்கள் என்று BMI என்ற நிறுவன ஆய்வு கூறுகிறது. டாடா, ரிலையன்ஸ், இந்துஸ்தான் யுனிலிவருடன் சேர்ந்து தற்போது ஹோசனா கன்சியூமர் என்ற நிறுவனமும் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக பொருட்களை விற்கத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் இணைய பயன்பாடு மேலும் அதிகரிக்க இருக்கும் சூழலில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, டிஜிட்டல் மார்கெட்டிங் உள்ளிட்டவை வளர அதிக வாய்ப்பு உள்ளது. பெரிய நிறுவனங்கள் நகரங்களை மட்டும் குறிவைக்கும் நிலையில் சின்னச்சின்ன நிறுவனங்களும் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர்.வாடிக்கையாளர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிவதும் மிகவும் முக்கியமாகிறது.