ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் – புதிய அப்டேட்..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நிஃப்டி பங்குகள் உயர முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸின் வியூக வகுக்கும் முதலீட்டு திட்டத்துக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசில் இருந்து முற்றிலுமாக பிரிந்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற பெயரில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து 1 லட்சம் கோடி ரூபாய் ஜியோ நிதி சேவை நிறுவனத்துக்கு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது வரை பஜாஜ் நிதி நிறுவனங்கள் மட்டுமே 2.7 லட்சம் கோடி ரூபாய் நிதியை வைத்துள்ளன. ரிலையன்ஸ் குழுமம் 3 லட்சம் கோடி ரூபாயாக நிதியை உயர்த்தும் அளவுக்கு திட்டம் உள்ளது. இது வங்கி இல்லாத நிதி நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிகமாகும்
ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து பிரிந்து நிதி சேவைகளை அளிக்கும்பட்சத்தில் இந்தியாவின் 5ஆவது பெரிய நிதி நிறுவனமாக ஜியோ பைனான்சியல் நிறுவனம் மாறிவிடும். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 2 ஆயிரத்து 657 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இது நிஃப்டி 50யில் உள்ள அதிகபட்ச பங்கு மதிப்பாகும், குறிப்பிட்ட இந்த நிறுவன பங்குகள் மட்டும் 14.4 புள்ளிகள் அதிகரித்துள்ளன.