ரிலையன்ஸ் ஜியோ மார்ட்டில் ஆட்குறைப்பு !!!
அத்தனை எளிதில் யாரையும் வேலையைவிட்டு எடுக்க தயங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மார்ட் பிரிவில் ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டம் தயாராக உள்ளது. மெட்ரோ கேஷ் அன்ட் கேரி என்ற நிறுவனத்துடன் அண்மையில் ஜியோ மார்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. நிதியை சிக்கனமாக செலவிடுவதன் ஒரு பகுதியாக 15 ஆயிரம் பேரை வேலையில் இருந்து தூக்கவும் ரிலையன்ஸ் திட்டமிட்டிருக்கிறது. செயல்பாட்டு பிரிவில் சாதாரண தொழிலாளர்கள் மட்டத்தில் 500 பேர் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டனர். யாரெல்லாம் சரியாக பணியாற்றவில்லை என்று நிறுவனத்துக்கு தோன்றுகிறதோ அவர்களையும் நீக்குவதற்கான அடுத்தகட்ட பணிகள் துவங்கியுள்ளன. அடுத்த நூற்றுக்கணக்கானோருக்கு வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இருக்கும் ஊழியர்களும், ரிலையன்ஸ் ஜியோ மார்ட்டுக்கு உரிய ஊழியர்களும் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்டதால் வேறு வழியின்றி சிலரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். 150 ஜியோமார்ட் கடைகளையும் மூட திட்டம் தயாராகியுள்ளது. ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் அண்மையில் மெட்ரோ நிறுவனத்தின் 31 கடைகளை 2,850 கோடி ரூபாய்க்கு வாங்கியதன் விளைவாக ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆன்லைனில் ஒரு பக்கம் வணிகம் வளர்ந்து வந்தாலும் நேரடி கடைகளாக 3,300 கடைகளை திறக்கவும் பணிகள் நடக்கின்றன.