பரஸ்பர நிதியிலும் குதிக்கிறதா ரிலையன்ஸ்…
ரிலையன்ஸின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இந்தியாவில் மியூச்சுல் பண்ட் துறையிலும் கால் வைக்க துடித்து வருகிறது. இந்த நிலையில் என்ன நடக்கிறது என்பதை பிரபல நிறுவனமான டாடா குழுமமும் மிகக்கூர்மையாக கவனித்து வருகிறதாம்.யுடிஐ சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்தை வாங்குவது குறித்து டாடா குழுமம் இறுதி முடிவு எடுக்க இருக்கிறதாம். இந்திய பரஸ்பர நிதி பிரிவில் புதிதாக ஏராளமானோர் களமிறங்க இருக்கின்றனர்.கிட்டத்தட்ட 6க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புதிதாக இணைய இருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி, எல்ஐசி,பாரத ஸ்டேட் வங்கி,பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீடு மட்டும் யுடிஐ நிறுவனத்தில் 45%உள்ளன. யுடிஐ நிறுவனத்தை வாங்க அதிக நேரம் ஒதுக்கீடு செய்துள்ள டாடா குழும அதிகாரிகள்,ரிலையன்சின் நகர்வுகளை கண்காணித்து வருகின்றனர்.எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக யுடிஐ பங்குகளை வாங்க டாடா ஆர்வம் காட்டி வருகிறது. தேசிய கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கியின் தலைவரான கே.வி.காமத்தை ஜியோ பைனான்சியல் நிறுவனம் களத்தில் இறக்கியிருக்கிறது. யுடிஐ மாதிரி இல்லாமல் புதிய உத்தியை இறக்க காமத்துக்கு ஜியோ நிறுவனம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட சொத்து நிர்வகிக்கும் நிறுவனங்கள்,43.77 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளை நிர்வகித்து வருகின்றனர். பாரத ஸ்டேட் வங்கியின் பரஸ்பர நிதி,ஐசிஐசிஐ புரோடென்சியல் மியூச்சுவல் பண்ட் மற்றும் எச்டிஎப்சி மியூச்சுவல் பண்ட் ஆகிய 3 நிறுவனங்கள்தான் மிகப்பெரிய சொத்து நிர்வகிக்கும் நிறுவனங்களாக உள்ளன. இந்த நிலையில் ரிலையன்சின் வரவு ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் படைத்தது என்கிறார்கள் நிபுணர்கள்.