ரெலிகேர் பங்குகள் வீழ்ச்சி…

இந்திய பங்குச்சந்தையில் திங்கட்கிழமை ரெலிகேர் என்டர்பிரைசர்ஸ் நிறுவன பங்குகள் கணிசமாக சரிவை சந்தித்தது. பர்மன் குடும்பத்தினர் 26 விழுக்காடு பங்குகளை ஓபன் ஆபர் மூலம் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். 235 ரூபாய் ஒரு பங்கு என்ற அளவில் ரெலிகேர் பங்குகள் 2 ஆயிரத்து 116 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஜுன் வரையிலான காலண்டில் குறிப்பிட்ட ஒரு குடும்பம் 21.54விழுக்காடு பங்குகள் வைத்துள்ளது. இந்த ஓபன் ஆஃபர் எனப்படும் திறந்தநிலை ஆஃபர் மூலம் ரெலிகேர் நிறுவனத்தின் பங்குகளை குறிப்பிட்ட ஒரு குடும்பம் அதிகம் வைக்க முயற்சிகள் நடைபெறுகிறது. குறிப்பிட்ட நிறுவனம், வங்கி, கடன் வழங்கல்,சுகாதார சேவைகளில் கால்பதிக்க இருக்கிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தில் பணம் வழங்குவதன் மூலம் வலுவான வணிக வாய்ப்பு உள்ளதாக பர்மன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புதிதாகா 5.27விழுக்காடு பங்குகளை அதிகரிப்பதன்மூலம் மொத்த பங்கு 26.81 ஆக பர்மன் குடும்பத்தினர் வசம் செல்ல இருக்கிறது.குறிப்பிட்ட இந்த பரிவர்த்தனைக்கு நிதி ஆலோசகராக ஜே எம் பைனான்சியல் நிறுவனம் செயல்படுகிறது. இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்க இருக்கிறது.