ரிமோட் வேலை செட்டாகாது பாஸ்…
அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஆண்டி ஜாசி அண்மையில் தனது நிறுவன பணியாளர்கள் மத்தியில் பேசினார். அதில் 3 நாட்களுக்கு அலுவலகம் வரவேண்டும் மற்ற நாட்களில் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்ற விதி செயல்படாது என்று சூசகமாக தெரிவித்தார்.கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றிய அவர்களுக்கு கடந்த மேமாதம் முதல் வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அந்நிறுவன பணியாளர்கள் சிலர் அப்போது போராட்டத்திலும் ஈடுபட்டனர். கட்டாயம் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்க்கவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறும் ஜாசி, இதில் விருப்பம் இல்லாதவர்கள் வேறு எங்காவது பணியை தேடிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். கொடுத்த சலுகையை சரியாக பயன்படுத்த வேண்டுமெனில் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்றும், விருப்பம் இல்லாதவர்கள் வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று கடந்த ஜூலையில் அமேசான் நிறுவனம் கட்டாயமாக தெரிவித்துவிட்டது. அமேசான் நிறுவனத்தில் பணிசெய்ய விருப்பம் இல்லாதவர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்யும் திட்டமும் எப்போதும் தயாராக இருக்கிறது. உலகின் பல நாடுகளில் வணிகத்தை செய்து வரும் அமேசான் நிறுவனம் தனது பணியாளர்களிடம் கடுமை காட்டுவதாகவும் ஒரு தரப்பு புகார் தெரிவித்து வருகின்றனர். இழப்புகளை சமாளிக்க கொஞ்சம் கொஞ்சமாக பிடியை தளர்த்தாமல் பிடிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.