மெனுவில் இருந்து தக்காளியை தூக்குங்க..
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மெக்டொனால்ட் நிறுவனம் மிகவும் பிரபலமானதாகும். வடஇந்தியா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் உள்ள தனது கடைகளுக்கு தக்காளி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறியுள்ள அந்நிறுவனம், இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் சில கடைகளில் 10 முதல் 15 விழுக்காடு கடைகளில் தக்காளி பரிமாறுவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சீசன் நேரங்களில் இந்த பிரச்சனை வருவது இயல்பு என்றாலும் இந்த முறை தக்காளியே பெரிய அளவில் கிடைக்கவில்லை என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மெக்டொனால்ட் நிறுவனம் இப்படி கூறுகையில் பர்கர்கிங் என்ற சங்கிலித்தொடர் வணிக நிறுவனம், தக்காளிகளை அதிகளவில் மெனுவில் சேர்ப்பதாக கூறியுள்ளது. இந்தியாவில் தக்காளி விலை மழைக்காலங்களில் மட்டும்,கடுமையாக உயர்வது தொடர்கதையாக உள்ளது. டெல்லி, கொல்கத்தா,உத்தரபிரதேசத்தில் ஒரு கிலோ தக்காளி 155 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் பெரிய தட்டுப்பாடு இந்தியா முழுவதும் உள்ளது. போதிய தக்காளி கிடைக்கவில்லை என்றபோதிலும் உலகத்தரம் வாய்ந்த தக்காளிகளை மட்டுமே தங்கள் நிறுவனத்தில் பயன்படுத்துவதாகவும் மெக்டொனால்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் கிலோ 115 ரூபாய்க்கும், தமிழ்நாட்டில் கிலோ 60 ரூபாய்க்கும்,திருப்பதியில் கிலோ 50 ரூபாய்க்கும் தக்காளி விற்பனையை அந்தந்த மாநில அரசுகளே செய்து வருகின்றன. பருவம் தவறிய மழை மற்றும் அதீத வெயில் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.