மீண்டும் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள் நாள்தோறும் புதுப்புது உச்சங்கள் தொட்டு வரலாறு படைத்து வருகின்றன. இந்த வரிசையில் டிசம்பர் 28 ஆம் தேதி வர்த்தகத்தின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 ஆயிரத்து 400 புள்ளிகளையும், நிஃப்டி 21,700 புள்ளிகளையும் முதல் முறையாக கடந்திருக்கின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 371 புள்ளிகள் உயர்ந்து 72,410 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 123 புள்ளிகள் உயர்ந்து 21,778 புள்ளிகளில் வணிகம் முடிந்தது. எட்டியுள்ளது. தேசிய பங்குச்சந்தையில் மிகப்பெரிய லாபமாக Coal India, NTPC, M&M, Dr Reddy’s Laboratories ,Hero MotoCorpஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை சந்தித்தன. Adani Enterprises, Eicher Motors, LTIMindtree, L&T and Adani Ports.உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் தவிர்த்து மற்ற அனைத்துத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. BHEL, Dishman Carboge, Engineers India, Gillette India, Greenpanel Industries, GSFC, Hindustan Copper, HPCL, HUDCO, KEI Industries, Mangalam Cement, NALCO, SAIL and Sandur Manganes உள்ளிட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டுள்ளன. பங்குச்சந்தைகள் ஒருபக்கம் உச்சங்களை தொட்டு வரும் நிலையில் தங்கம் விலையும் மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் முன்தின விலையைவிட 45 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5945 ரூபாயாக இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் 47,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து 81 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3விழுக்காடும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கவேண்டும். இதில் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நகை வாங்குவோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.