ரெபோ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதி கொள்கை கூட்டம் ரிசர்வ் வங்கியால் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் .இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் ஆலோசனை நடத்தப் படும். இந்நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி் அளிக்கும் கடன்களுக்கு வட்டி விகிதமும் அறிவிக்கப்படும். இதன்படி ஆகஸ்டுக்கான ரெபோ விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிக்கப் பட்டுள்ளது. அதாவது கடன்கள் மீதான வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடர இ்ருக்கிறது. கடந்த 8,9ஆகிய தேதிகளில் ஆலோசிக்க பட்ட அம்சங்கள் குறித்து ஆளுநர் சக்தி காந்தாஸ் இன்று அறிவித்தார்.பின்னர் பேசிய அவர், உலக பொருளாதாரமும் பல சவால்களை சந்தித்து உள்ளதாக கூறினார். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வளர்ச்சி நன்றாக உள்ளதாக க்கூறினார். உலகளவில் நிலவும் பொருளாதார நிலை காரணமாக உணவு மற்றும் ஆற்றல் துறை சிக்கலை சந்தித்து வருவதாக கூறினார்.தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கிசான் கடன் அட்டை வழங்கும் பணி ரிசர்வ் வங்கியின் முன்னெடுப்பில் புதிய முறையில் நடக்க இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார்.