பச்சைக்கொடி காட்டிய ரிசரவ் வங்கி
இந்தியாவில் முழு பட்ஜெட் இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அனைத்து தரப்பினரின் கண்களும் பட்ஜெட் மீதே உள்ளன. இந்நிலையில் ஐடிபிஐ வங்கியினை வாங்க தகுதிச்சான்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த 2021 முதல் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்க முயற்சி நடைபெற்று வருகிறது. தகுதி வாய்ந்த யாராவது வந்தால், ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. 95 ஆயிரம் கோடி ரூபாயை சந்தை மதிப்பு நெருங்கி வரும் நிலையில், 29 ஆயிரம் கோடி ரூபாயை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஐடிபிஐ நிறுவனத்தில் எல்ஐசி மற்றும் மத்திய அரசின் பங்குகள் 94.72 விழுக்காடாக உள்ளது. எல்ஐசியிடம் மட்டும் 49.24%, மத்திய அரசிடம் 45.48விழுக்காடு பங்குகளும் உள்ளன. மீதம் உள்ள 5.28 விழுக்காடு பங்குகள் பொது மக்கள் மற்றும் பங்குதாரர்களிடம் உள்ளன.
தற்போது 60.7 விழுக்காடு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வரும் பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியார் மயமாக்குவதில் மிகப்பெரிய கவனத்தை மோடி அரசு செய்து வருகிறது. பிபிசிஎல், கான்கார்,பிஇஎம்எல் உள்ளிட்டட நிறுவனங்களையும், ஐடிபிஐ வங்கியை தனியார் மயப்படுத்துவதும் என் அடுத்தடுத்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்தல் வந்ததால் கடந்த 18 மாதங்களாக தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வரும் நிதியாண்டில் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்கள் வசம் உள்ள நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசு நடத்தி வரும் நிறுவனங்களை மறு சீரமைப்பு செய்யவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனத்தை மட்டும்தான் மத்திய அரசால் டாடாவுக்கு விற்க முடிந்தது. மற்றபடி எல்ஐசியின் 3.5விழுக்காடு பங்குகளை மட்டுமே விற்க முடிந்தது.