அமெரிக்காவை கேட்டுக்கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர்..
பண மதிப்பீட்டு பட்டியலை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய ரிசர்வ்வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கேட்டுக்கொண்டார். வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளின் பட்டியலை அமெரிக்கா தயாரிப்பதாகவும் தாஸ் கூறினார். மொரோக்கோ நாட்டில் நடந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய சக்தி காந்ததாஸ், நவீன பொருளாதார கொள்கைகளால் , வளர்ந்து வரும் சந்தைகளை கொண்ட நாடுகள் பல தரப்பட்ட சவால்களை சந்தித்து வருவதாக கூறினார். அமெரிக்க நிதியமைச்சகம் கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவை தகுதி வாய்ந்த பண மதிப்பீட்டாளராக அங்கீகரித்தது. பின்னர் இரண்டு ஆம்டுகளில் இந்தியாவை அந்நாடு நீக்கியது. இந்த பட்டியலில் சீனா,ஜெர்மனி,ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 7 பொருளாதார நாடுகள் பட்டியலை மட்டும் வைத்துள்ளது. உலகளவில் மிகவும் ஆக்டிவாக அமெரிக்க டாலர்களை அதிகம் வாங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது.கடந்தாண்டு அக்டோபரில் இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 525 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது.தற்போது ரிசர்வ் வங்கி சார்பில் மேலும் 60 பில்லியன் டாலர் இந்தியாவின் வசம் சேர்ந்துள்ளது. இந்தியாவின் பண கையிருப்பு என்பது பாதிப்புகளுக்கு ஆளாகும் ரிஸ்குகளுக்கு எதிராக காப்பீடு போல செயல்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அதீத மக்கள் தொகை,இந்தியாவின் பொருளாதாரம்ஆகியவற்றை வைத்து பார்த்தால் இந்தியா சுயசார்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இந்தியாவசம் அதிக வெளிநாட்டு கரன்சிகையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ்வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் டிஜிட்டல் பணம்தான் உலகின் எதிர்காலம் என்று குறிப்பிட்டுள்ள தாஸ், மற்ற நாடுகளும் மத்திய வங்கிகளும் டிஜிட்டல் பணத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தனியார் கிரிப்டோ கரன்சிகள் அபாயகரமானவை என்று தெரிவித்துள்ளார்.