ரிசர்வ் வங்கி சைட்டே டமாலு…
2 ஆயிரம்ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததும் ரிசர்வ் வங்கி இணையதளம் அதிக தேடல்களால் முடங்கிப்போனது. மே 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திருபம்பபெறுவது குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து அதில் வேறு என்ன அம்சங்கள் உள்ளன என்பது பற்றி ஏராளமானோர் ஒரே நேரத்தில் தெரிந்துகொள்ள விரும்பி இணையதளத்தை தேட ஆரம்பித்தனர். இதனால் அந்த இணையதள சேவை பாதிக்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டிலும் 500 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தஅன்றும் வெப்சைட் முடிங்கிப்போயிருந்தது. கிளீன் நோட் பாலிசி என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன. வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகும் இந் த ரூபாய் நோட்டுகள் நிலை குறித்து ரிசர்வ் வங்கி தெளிவாக தெரிவிக்கவில்லை. அதுவரை எந்த வங்கிகளிலும் சென்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிககொள்ள வகை செய்யப்பட்டுள்ளது தற்போது வரை புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலவனவை 2017ஆம் ஆண்டுக்கு முன்பே எடுக்கப்பட்டவைதான், வெறும் 7 ஆண்டுகளில் 2 ஆயிரம் ரூபாய் மறித்து போய்விட்டது என்றே கூறலாம்.