கோவிட் அட்வான்ஸுக்கு ஓய்வளிப்பு…
கொரோனா காலகட்டத்தில் EPFOநிறுவனத்தில் கணக்கு வைத்திருந்தவர்கள் covid Advanceவாங்கும் வகையில் வழிமுறைகள் இருந்தன. ஆனால் இதனை தற்போது EPFOநிறுவனம் ஓய்வளித்துவிட்டது. கொரோனா பெருந்தொற்றும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், PFOவில் கோவிட் முன்பணம் வசதியை தற்காலிகமாக நீக்கிவிட EPFO அமைப்பு தனது கூட்டத்தில் முடிவெடுத்துவிட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. PFகணக்கு வைத்திருப்போர் இந்த பிரிவில் விண்ணப்பிக்க இயலாத வகையில் மென்பொருளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருபக்கம் சேமிப்புகளை எடுக்க வகை செய்துவிட்டது மிகப்பெரிய தவறு என்றும் அது PFநிறுவனத்துக்கு பாதகமாகும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது தாமதமான முடிவு என்பதும் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. கோவிட் அட்வான்ஸ் என்ற முன்பனத்தை 2கோடியே 20 லட்சம் பேர் கோவிட் அட்வான்ஸ் திட்டத்தில் தங்கள் சேமிப்பில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டுள்ளதாக அரசுத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது 48,075 கோடி ரூபாய் அளவுக்கு கோவிட் அட்வான்ஸ் திட்டத்தில் பணமாக PFOநிறுவனத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
17,106கோடி ரூபாய் அளவுக்கு பணம் 20-21 நிதியாண்டிலும்,19,126.29 கோடி ரூபாய் 21-22 நிதியாண்டிலும், 22-23 நிதியாண்டில் 11,843 கோடி ரூபாயும் கோவிட் அட்வான்ஸ் திட்டத்தின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.
6 கோடிசந்தாதாரர்களை வைத்துள்ள EPFO நிறுவனம், சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கத்தையும், முதலீடாகவும் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே PFநிறுவனத்தில் வகுக்கப்பட்ட விதிகளில் கடந்த மார்ச் 2020-ல் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டது. இதன் விளைவாக கோவிட் அட்வான்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அமலாகின. கடந்த 2020 மார்ச் 28 ஆம் தேதிக்கு பிறகு இந்த திட்டம் அமலா