டிசம்பர் 31 வரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள்..
இந்தியாவில் வெங்காயத்தின் விற்பனை விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இது ஏற்றுமதி செய்வோரை கடுமையாக கடுமையாக பாதித்துள்ளது. இந்த சூழலில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக ஒரு டன்னுக்கு 800 டாலராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய விதி வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலாக இருக்கிறது. வெளிநாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குநரகம்,வெங்காய ஏற்றுமதி தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அக்டோபர் 29ஆம் தேதி அறிவித்துள்ளது. ஏற்றுமதி தொடர்பான அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறியுள்ள அந்த அமைச்சகம்.ஏற்கனவே பரிசீலனையில் உள்ள கண்டெய்னர்கள் இந்த விதியில்லாமல் இயங்க திட்டமிடப்பட்டுள்ளது. லசல்கான் விவசாய கூட்டுறவு சந்தையில் வெங்காயத்தின் விலை கடந்த 15 நாட்களில் மட்டும் 60%அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 18%விலை அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதம் வரை வெங்காயத்தின் விலை கணிசமாக உயரும் என்றே வணிகர்கள் கணிக்கின்றனர். டிசம்பருக்கு பிறகு காரீப் பருவ வெங்காயம் சந்தைகளுக்கு வந்துவிடும் என்பதால் அதுவரை வெங்காயத்தின் விலை உயர்ந்தே இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. சில்லறை சந்தையில் தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 65 முதல் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 67 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.பிக்பாஸ்கட்டிலும் இந்த செய்தி எழுதும்போது கிலோ 67 ரூபாயாக விலை இருந்தது.