ஃபைபர் அடிப்படையிலான பிராண்பேண்ட் பொருட்களுக்கு கட்டுப்பாடு?
ஃபைபர் அடிப்படையிலான பிராட்பேண்ட்களுக்கான பொருட்களை இறக்குமதி உரிமத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை செய்து வருகின்றன.உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவே இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவால் உள்நாட்டு பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் என்றும் துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஜியோவும், பார்தி ஏர்டெலும் இணைந்து ஃபைபர் சார்ந்த இணைய சேவை அளிக்க தீவிரம் காட்டி வரும் நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாடுகள் தரத்தை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
gigabit passive optical network என்ற கருவி, வைஃபை,ஈத்தர்நெட் ஸ்விட்ச்கள்,உள்ளிட்டவை இந்த புதிய உரிம கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட இருக்கிறது இந்த சாதனங்கள் நாம் தொலைபேசியில் பேசும் பேச்சுகளை அதிவேகத்தில் சிக்னலாக மாற்றி கடத்தும் திறன் பெற்றவையாகும். இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய உரிமம் கட்டாயமாகும்பட்சத்தில் உள்ளூரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை கணிசமாக உயரும் என்று கூறப்படுகிறது
உள்நாட்டில் உள்ள லேப்டாப் உற்பத்திகளை அதிகரிக்கும் நோக்கில் அண்மையில் வெளிநாட்டு லேப்டாப்கள் இறக்குமதிக்கு திடீர் தடைவிதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசின் புதிய திட்டம் இன்னும் சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.