தங்க இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்
இந்தியர்களையும் தங்கத்தையும் பிரிப்பது என்பது உண்மையில் சாத்தியமே இல்லாத விஷயம், உலகில் வேறு எந்த நாட்டிலும் இத்தகைய ஆர்வம் தங்கத்தின் மீது இருப்பதே கிடையாது. இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேவையில்லாத தங்க ஆபரணங்களை இறக்குமதி செய்வதை குறைப்பதற்காகவே இந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட உயர் ரக நகைகளை வாங்கவேண்டுமெனில் இனி அரசிடம் இருந்து உரிமத்தை வாங்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த புதிய கட்டுப்பாடுகள் மற்ற நாடுகளுக்கு பொருந்தும் ஆனால் இந்தியா-ஐக்கிய அரபு நாடுகளுக்கு பொருந்தாது. எளிதாக சொல்லவேண்டுமெனில், அமீரக நாடுகளில் இருந்து எந்த வகையான நகைகளையும் மக்கள் வழக்கம்போல இந்தியாவுக்கு இறக்குமதி செய்துகொள்ளலாம்.. முத்துகள், விலையுயர்ந்த கற்களின் இறக்குமதி 25 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக வெளிநாட்டு வணிக பொது இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இந்த அளவு என்பது கடந்த ஏப்ரல் முதல் மே வரை மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு மே மாதம் வரை தங்கத்தின் இறக்குமதியும் சுமார் 40 விழுக்காடு வரை குறைந்திருப்பதாகவும் அந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். 4.7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பொருட்கள் இறக்குமதி 10.24 விழுக்காடு சரிந்துள்ளது. மொத்தம் 107 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. உண்மையில் சொல்லப்போனால் கடந்தாண்டு இருந்த சூழலை விட பல்வேறு பொருட்களின் விற்பனை பற்றாக்குறை சற்று குறைந்துள்ளது. அதாவது 2022-இல் 40.48 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது 2023 நிலவரப்படி 37.26பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.