மீண்டெழுந்த சந்தைகள்..
கடந்த சில நாட்களாக தொடர் சரிவுகளை சந்தித்து வந்த இந்திய சந்தைகள் செப்டம்பர் 29ஆம் தேதியான வெள்ளிக்கிழமை அமோக முன்னேற்றத்தை கண்டன. உலகளவில் ஏற்பட்ட சாதகமான சூழல் காரணமாக இந்தியாவிலும் பங்குச்சந்தைகளில் நல்ல ஏற்றம் காணப்படுகிறது. ரிலையன்ஸ்,HDFCமற்றும் ICICI பங்குகள் சந்தையின் போக்கையே மாற்றினர்.வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600புள்ளிகள் உயர்ந்து 66,100 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 190 புள்ளிகள் அதிகரித்து 19,700புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றம் காரணமாக 3 .28லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைத்திருக்கிறது. மொத்த சந்தை மூலதன மதிப்பு மட்டும் 319.94 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.மருந்துத்துறை பங்குகள் 3%,உலோகத்துறை பங்குகள் 2%ஏற்றம் கண்டுள்ளன.அமெரிக்காவில் பங்குத்சந்தைகளில் நிலவும் சாதகமான சூழல்,பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி,அமெரிக்க பாண்ட் பத்திரங்கள் மீதான விலையில் மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் சந்தைகளில் நல்ல லாபம் கிடைத்துள்ளது. குறிப்பாக பிற்பகலில் நடந்த வணிகம் சந்தை மதிப்பை உயர்த்தியது.இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து 83 ரூபாய் 10 காசுகளாக உயர்ந்துள்ளது. பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும் சூழலில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் விலை குறைந்து 5390 ரூபாயாக உள்ளது. இது முன்தின விலையைவிட சவரனுக்கு 160 ரூபாய் குறைவாகும். ஒரு சவரன் தங்கம் விலை 43,120 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 77 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.கட்டி வெள்ளி விலைகிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரிக்கு 77ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் 3%ஜிஎஸ்டி மற்றும், செய்கூலி,சேதாரம் சேர்க்கப்படவேண்டும், ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், கடந்த 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் குறைந்திருக்கிறது. வரும் நாட்களில் விலையேற வாய்ப்பிருப்பதாக வணிகர்கள் கூறும் நிலையில் தங்கம் வாங்க இதுவே சிறந்த நேரம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.