12 வயதில் ரிட்டயர்மன்ட்..
டிஜிட்டல் மயமாகிவிட்ட உலகில் அதிகம் சம்பாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக புதிதாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிக்சி கர்டிஸ். 11 வயது முடிந்து தனது 12 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் பிக்சி,ஒரு தொழிலதிபராவார். ஆமாம் பிக்சி என்பது இவரின் பொம்மை நிறுவனம். அவர் தனது ரிட்டயர்மென்ட் பார்ட்டிக்கு வந்தவர்களுக்கு தந்த பொருட்களில் அழகுசாதன பொருட்களும் இருக்கின்றன. ஒரு கிஃப்ட் பெட்டி இந்திய மதிப்பில் 4 ஆயிரத்து 112 ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. பிக்சி தனது தாய் Roxy Jacenko உடன் இணைந்து கடந்த 2021ஆம் ஆண்டில் பொம்மை கம்பெனியை ஆரம்பித்தார்.
கொரோனா காலகட்டத்தில் இந்த பிஸ்னஸ் அட்டகாசமாக நடந்ததால் இரண்டே ஆண்டுகளில் கோடீஸ்வரி ஆகிவிட்டார் இந்த 12 வயது சிறுமி மாதந்தோறும் பிக்சியின் வருமானம் 1 கோடியே 09 லட்சத்து 40 ஆயிரத்து 546 ரூபாயாக இருக்கிறது. பதினோரு வயதிலேயே பிக்சியிடம் மெர்சிடீஸ் பென்ஸ் காரும் இருக்கிறது. 11 வயதில் நிறுவனத்தின் பிஸ்னஸை விட்டுவிட்டு படிக்கும் வேலையில் அந்த சிறுமி கவனம் செலுத்தி வருகிறார்.அரும்பாடு பட்டு பல ஆண்டுகள் உழைத்து ஓடாய் தேந்த பலருக்கும் இந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.