இந்த வங்கியில் ஆட்குறைப்பு
பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஒரு நிறுவனம் என்றால் உலகளவில் சிட்டி குழுமத்தை சொல்லாம் அப்படிப்பட்ட நிறுவனத்தில் தற்போது 2.40லட்சம் பேருக்கு தற்போது சிக்கல் நேரிட்டுள்ளது. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை செயல் அதிகாரி ஜேன் பிரேசர் மிக கடுமையாக பேசியுள்ளார். குறிப்பாக நிறுவனத்தை உயர்த்த உழைக்க வேண்டும் அல்லது, வேலையை விட்டு செல்லுங்கள் என்ற கூறியுள்ளார். பிரிட்டனில் குறிப்பிடத்தகுந்த அளவில் மக்களின் செலவுகள் அதிகரி்கும் என்று கூறப்படுகிறது.16,0௦0பேர் பிரிட்டனில் பணியில் உள்ளனர். சிட்டி குழுமம் அதிகவேக மாற்றத்தை சந்திக்க இருப்பதாக கூறியுள்ள ஜேன் பிரேசர்,மாற்றத்தை சந்திக்க தயாராகவேண்டும் என்றும் அதேநேரம் மாற்றத்தை விரும்பாதவர்கள் ரயிலில் இருந்து கீழே இறங்க நேரிடும் என்று ஜேன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். சரியாக பணியாற்றாத பணியாளர்களுக்கு ஏற்கனவே மெமோ அளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.கொரோனா காலகட்டத்துக்கு பிறகு பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை குறைத்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை சேமித்த வரும் நிலையில் பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஒரு நிறுவனம் திடீரென ஆட்குறைப்பு செய்யும் பணிகளை தொடங்கியிருப்பது உலகின் பல நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.