புத்துயிர் பெறுகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்!!!
பிரதான தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையை அளித்து வருவதால் ,போட்டியை சமாளிக்க முடியாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் நிதி இல்லாமல் தவித்து வந்தது. பல முறை பிஎஸ்என்எல் தொழில்சங்கங்கள் 4ஜிக்கு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்தினர். ஆனால் இன்றளவும் சரியான நிதி இல்லாமல் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் அளிக்க முடியாமல் உள்ளது. இந்த சூழலில் இந்தாண்டு முழுவதும் பல்வேறு பணிகளை செய்யவும், லேண்ட்லைன் கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை அளிக்க பட்ஜெட்டில் 53,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வரும் நிதியாண்டில் இருந்து இந்த தொகையை எடுத்து பயன்படுத்தி பிஎஸ்என்எல் வலுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்வதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வியாபார போட்டியை சமாளிக்க கடந்தாண்டே பிஎஸ்என்எல்லுக்கு 1லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 53 ஆயிரம் கோடி ரூபாயைவைத்து புதிய டவர்கள் நடவும் அதனை பராமரிக்கவும் பிஎஸ்என்எஸ் திட்டமிட்டுள்ளது. இத்தனை போட்டிக்கு மத்தியிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 2021-2022நிதியாண்டில் 85ஆயிரத்து828 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. பிஎஸ்என்எல் போலவே அஞ்சல்துறையை வலுப்படுத்தவும் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.25ஆயிரத்து814 கோடி ரூபாய் அஞ்சல்துறை பெற்றுள்ளது .அஞ்சல்துறையில் உள்ள வங்கிகளில் பேமண்ட் வசதியை ஏற்படுத்த 250 கோடி ரூபாயும் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.