பங்குச்சந்தைகளில் உயர்வு..!!!
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்ந்து 62 ஆயிரத்து 724 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 601 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. BPCl,Hcl tech, infy,Ntpc ஆகிய பங்குகள் ஏற்றம் கண்டன. பவர்கிரிட், L&t,cipla ஆகிய பங்குகள் சரிவை கண்டன. இந்திய சந்தைகள் ஒரு பக்கம் உயர்ந்தாலும் தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் குறைந்து 5580 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 80 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் சரிந்து 79 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 79 ஆயிரத்து 300ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மேலே குறிப்பிட்டுள்ள விலையுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டியும்,செய்கூலியும், சேதாரமும் சேர்க்க வேண்டும். இந்த செய்கூலி,சேதாரம் கடைக்கு கடைக்கு மாறுபடும் . குறைவான செய்கூலி,சேதாரம் உள்ள கடைகளில் நகைகளை வாங்குவது சிறந்த முடிவாகும்.