தகிக்கும் தங்கம் விலை தவிக்கும் மக்கள்..
இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2349 டாலர் என்ற புதிய விலையில் விற்கப்படுகிறது. கடந்த 1 வாரத்தில் மட்டும் அமெரிக்காவில் 3.8 விழுக்காடு தங்கம் விற்கப்படுகிறது. கோல் பியூச்சர்ஸ் எனப்படும் பத்திரங்களும் லாபத்தை பதிவு செய்திருக்கின்றன. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகளை அந்நாட்டு பணியாளர்கள் துறை வெளியிட்டது. அதில் கடந்த மாதத்தில் மட்டும் 3.03 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது நிபுணர்கள் கணித்த அளவை விட அதிகமாகும். அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவெல் கூறும்போது, கடன்கள் மீதான வட்டி விகிதங்களை குறைக்கும் முடிவுக்கு வரமுடியவில்லை என்றும் கூறினார். இதன் காரணமாக அந்நாட்டில் வட்டி வகிதம் 5.25 முதல் 5.50 விழுக்காடுக்குள் வட்டி விகிதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியின்விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் 27.30 டாலர்கள் உயர்ந்துள்ளது. பிளாட்டினம் 925 டாலர்களாகவே இருக்கிறது. பலாடியம் 1.7 விழுக்காடு குறைந்து ஒரு அவுன்ஸ் ஆயிரத்து 3 டாலர்களாக இருக்கிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் நடுத்தர வருவாய் உள்ள குடும்பங்கள் வாங்க முடியாத அவலி நிலைக்கு தங்கம் மாறிவிட்டது.