கச்சா எண்ணெய் விலை ஏறும் அபாயம்!!!
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளை ஒபெக் பிளஸ் நாடுகள் என்று அழைப்பார்கள். இந்த நாடுகள் தங்கள் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளனர்.இப்படி உற்பத்தி குறைப்பு செய்தால் அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிக்கும் அபாயம் இருக்கிறது. ஜூலை மாதத்தில் ஏற்கனவே உள்ள தடையுடன் ஒருநாளைக்கு 10லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க சவுதி அரேபியா திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த மே மாதத்தில் ஒரு நாளைக்கு 16 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சவுதி அரேபியா மொத்தமாக ஒரு நாளைக்கு 5லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயும்,ஈராக் 2 லட்சம்,ரஷ்யா 50ஆயீரம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைப்பதாக அறிவித்து அதற்கான பணிகளை செய்து வருகின்றன. பணவீக்கம் அதிகரிப்பு,உலகளவில் தேவை சரிவு மற்றும் சீனாவில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு ஆகிய காரணிகளால் ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் கச்சா எண்ணெயின் அளவு குறையும் என்று அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டின் இரண்டாவது பாதியில் சீனாவில் தேவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜூன் 2023 வரையிலான காலகட்டத்தில் 18,258 கோடி ரூபாய் வருவாயை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து உயர் ரக டீசல் 8.1விழுக்காடுதேவையும்,மோட்டார் ஸ்பிரிட் 6.8 விழுக்காடும்,,விமான எரிபொருள் தேவை 13.3 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது பாலியஸ்டர் தேவை 5 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.