Ukraine Russia War – இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு..!!
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76-ஆக சரிவடைந்தது.
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தி வருகின்றன. பங்குச் சந்தைகளும் கடும் சரிவை அடைந்துள்ளன.
மேலும் கச்சா எண்ணெய், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 76-ஆக சரிவடைந்தது
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 76.06 ஆக தொடங்கியது. அதிகபட்சம் 75.99 மற்றும் குறைந்தபட்சம் 76.22 இடையே டாலர் ஊசலாடியது. இறுதியாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 22 பைசா குறைந்து 76.16 ஆக இருந்தது.
வெளிநாட்டு நிதி வெளியேறியது மற்றும் உள்நாட்டு பங்குகளில் பலவீனமான போக்கு ஆகியவை சந்தையைப் பாதித்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.