அதிபர் விளாடிமிர் புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால்…
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் மீதாக போரைத் தவிர்த்திருக்கலாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
மாஸ்கோவுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமானால், மேற்கத்திய நட்பு நாடுகள் ஆதரிக்க வேண்டும், அவர் மேலும் கூறினார்.
”நிச்சயமாக மக்கள் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்”, ஆனால் இப்போதைக்கு “ஒப்பந்தம் எதுவும் இல்லை. புடின் சமாதானத்தை முன்வைக்கவில்லை” என்று ஜான்சன் கூறினார்.